மிளகு பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

பயத்தம் பருப்பு - ஒரு கப்

மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை

மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 12

இஞ்சி - அரை அங்குலத் துண்டு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நெய் - 50 கிராம்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் பயத்தம் பருப்பு போட்டு வாசனை வர ஒரு நிமிடம் வறுக்கவும்.

பிறகு அதனுடன் அரிசியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்., அரிசி, பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு முறை களைந்து விட்டு

குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

வாணலியில் நெய் 3 மேசைக்கரண்டி ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுத்துக் கொள்ளவும்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, அரிசி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு போடவும். அத்துடன் வறுத்து வைத்துள்ளவற்றையும் போட்டு நன்கு கிளறி விடவும்.

மேலும் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெய்ட் போட்டு வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். சுமார் 5 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் திறந்து மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான மிளகு பொங்கல் தயார்.

குறிப்புகள்: