மிளகு புளியோதரை (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
புளி - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
மிளகு - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
நல்லெண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாதத்தைப் பொலபொலவென்று வடித்து, ஆறவைத்து, அதன் மேல் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் நான்கையும் வெடிக்க விட்டு பருப்புகளையும் முந்திரியையும் வறுத்து சாதத்தில் போடவும்.
மிளகை பச்சையாகப் பொடி பண்ணிப் போட்டு, மீதமுள்ள எண்ணெயைப் பச்சையாக விடவும்.
புளியை கெட்டியாகக் கரைத்து உப்பு போட்டு பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு, கெட்டியாக ஆனதும் சாதத்தில் போட்டு கலந்து நன்கு ஊற வைத்துப் பின் பரிமாறவும்.
அவரவர் விருப்பப்படி, புளியையும் மிளகையும் கூட்டியோ குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்.