மிளகு சீரக சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - ஒரு பெரிய கப்

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

உளுந்து - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

முந்திரி - 10

கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

நெய் (அ) எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மிளகையும், சீரகத்தையும் வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.

இதை கொர கொரப்பாக பொடி செய்யவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும்.

இதில் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் இருந்து எடுக்கவும்.

எடுத்த உடன் தாளிப்பு சூடாக இருக்கும் போதே சூடான சாதம், உப்பு, மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

உங்கள் காரத்துக்கு ஏற்றபடி பொடியை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளவும்.

குறிப்புகள்: