மிளகு சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒன்றரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

பூண்டு - நான்கு பல்

மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உளுந்து - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மற்றும் பூண்டை சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் மிளகாய்ப்பொடி, மிளகுப்பொடி, உப்பு சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து தண்ணீர் சுண்டி எண்ணெய் வெளியேறியவுடன் எடுத்து வேகவைத்துள்ள அரிசியுடன் நன்கு கலந்து விடவும்.

குறிப்புகள்: