மிளகு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிளகு - 2 ஸ்பூன்

சாதம் - 2 கப்

கடுகு - 1 ஸ்பூன்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

வெங்காயம் - 2

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மிளகை பொடி செய்து கொள்ளவும்.சாதத்தை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வடித்துகொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கிகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கடலைபருப்பு தாளித்து அதனுடன் வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகு பொடி போட்டு நன்கு வதக்கி,அதில் சாதத்தை போட்டு அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: