மின்ட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் - 1 கப்

புதினா இலை - 3 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

வத்தல் - 2

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

புதினா இலையை அரைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்,உளுந்தம்பருப்பு,வத்தல்,கருவேப்பிலை,வெங்காயம் போட்டு வதக்கி அரைத்த புதினாவை போட்டு வதக்கவும்.பின் வேகவைத்த அரிசியை போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இருந்து இறக்கவும்.

குறிப்புகள்:

வெங்காயப்பச்சடி உடன் பரிமாறவும்.

தேவை என்றால் 1/2 கப் வேகவைத்த பட்டாணி சேக்கலாம்.