மாங்காய் பாத்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
மாங்காய் - ஒன்று
துருவிய தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் வத்தல் - 5
உளுத்தம் பருப்பு - ஒருஸ்பூன்
கடுகு - ஒருஸ்பூன்
ஜீரகம் - ஒருஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு அலம்பி உதிர்,உதிராக சாதம் வடித்து ஆற விடவும்.
மாங்காயைத்தோல் நீக்கி கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும்.
தேங்காய்,மாங்காய், மிளகாய், ஜீரகம் மிக்சியில் கொர,கொரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளித்து, அரைத்த விழுதையும் போட்டு சுருள வதக்கவும்.
நன்கு சுருண்டு வரும்போது பெருங்காயம், உப்புசேர்த்து நன்கு கிளறவும்.
இதில் ஆறிய சாதத்தைப்போட்டு நன்கு கலக்கவும். வேறு பாத்திரத்தில் மாற்றி, சூடாகப்பரிமாறவும்.
குறிப்புகள்:
சில சமயங்களில் வாயில் ருசியே இல்லாமல் சாப்பிடவே பிடிக்காமலிருக்கும். அதுபோன்ற சமயங்களில் இந்த மாங்காய் பாத வாய்க்கு மிகவும் ருசியுடன் இருக்கும்.