மாங்காய்ச் சாதம் (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கப்

தண்ணீர் - இரண்டரை கப்

மாங்காய் - 2

பச்சை மிளகாய் - 6

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

நிலக்கடலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் - அரைத் தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

நல்ல புளிப்பு மாங்காயாக தேர்ந்தெடுத்து, தோல் சீவி, துண்டுகளாக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையெனில் மாங்காய் அளவில் பாதி அளவிற்கு தேங்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும்.

பிறகு நறுக்கிய பச்சைமிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் போட்டு கிளறி எடுத்து ஆறவைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.

மாங்காயுடன் உப்பினை நன்றாகக் கலந்து சாதத்தில் கொட்டி நன்கு கிளறிக் கொள்ளவும்.

குறிப்புகள்: