மஷ்ரூம் புலவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

மொட்டுக் காளான் - அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி

நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

தக்காளி - 3

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லி இலை - சிறிதளவு

ஊறவைத்த பட்டாணி - கால் கப்

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 2

பிரிஞ்சி இலை - ஒன்று

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும்.

தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின் அரைத்த விழுது, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும்.

அவை நன்கு வதங்கியதும் அரிசி, காளான், பட்டாணி, உப்பு 1 1/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: