மஷ்ரும் பிரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
காளான் - 10
சாதம் - 1 கப்
பூண்டு - 3 பல்
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
வெங்காய தாழ் - 1/4 கப்
முட்டை - 1
ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.
காளானை நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
உப்பு, முட்டை மற்றும் சாஸ் வகைகளை ஊற்றி 3 நிமிடம் வதக்கி சாதத்தை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி வெங்காய தாழ் மற்றும் மிளகு தூள் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
இரண்டு மூன்று நாள் பழைய சாதம் பிரைட் ரைஸ்க்கு நன்றாக இருக்கும்.
ஸ்டிக்கி ரைசில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். முட்டை இல்லாமலும் செய்யலாம்.