மருந்து சோறு (1)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி (நாலு ஆழாக்கு)

நல்லெண்ணெய் - 125 கிராம்

தேங்காய் - ஒன்று

இஞ்சி பேஸ்ட் - 50 கிராம்

பூண்டு பேஸ்ட் - 25 கிராம்

மருந்து பொடி - கால் ஆழாக்கு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - ஐம்பது கிராம்

உளுந்து - ஐம்பது கிராம்

முட்டை - இரண்டு

வெல்லம் - கொஞசம்

உரித்த முழு பூண்டு - இரண்டு

செய்முறை:

முதலில் அரிசியை தனியாக, உளுந்து தனியாக ஊற வைக்கவும்.

தேங்காயை பால் எடுத்து வைக்கவும்.

எண்ணெயை காய வைத்து ஒரு பெரிய பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும்.

பிறகு கொத்தமல்லி, புதினா தழை சேர்த்து, பச்சை மிளகாயை ஒடித்து போட்டு

முதலில் கொஞ்சமாக தேங்காய் பாலில் மருந்து பொடியை கலக்கி ஊற்ற வேண்டும்.

பிறகு மொத்த பாலையும் ஒன்றுக்கு இரண்டு வீதம் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விட்டு கொதிக்கும் போது ஊறிய உளுந்தை போட்டு கட் பண்ணிய பூண்டு, வெல்லம் சேர்த்து அரிசி போட்டு வேகவிட்டு தம் போடவும்.

தம் போடும் முன் முட்டையை நல்ல கலக்கி ஊற்றி மூடிப் போட்டு தம்மில் விடவும்.

குறிப்புகள்:

இந்த மருந்து பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் பெயர் காயப்பொடி. பன்னிரண்டு வகை மருந்துவம் இதில் சேர்ந்துள்ளது. திருநெல்வேலி பக்கம் தயார் செய்கிறார்கள்.

இது பிள்ளை பிறந்த பிறகு இத்துடன் நிறைய பொருட்கள் சேர்த்து லேகியம் போல் செய்வார்கள்,இந்த பொடியில் சாப்பாடும் செய்வார்கள். இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்கள். வயிற்று புண்ணை ஆற்றும். மற்றவர்களும் சாப்பிடலாம்

இதற்கு தொட்டு கொள்ள மீன் குழம்பு, மீன் ஃப்ரை, ஃப்ளையின் தால் போன்றவை. கறி, சிக்கன் குழம்பும் நல்ல இருக்கும்.