ப்ரைடு ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப் உரித்தது
வெங்காயம் பச்சை தாள் - ஒன்று
நடுத்தரமான காரட் - ஒன்று
குடைமிளகாய்ப்பழம் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - கால் கப் அல்லது டால்டா
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
முளைவிட்ட பீன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தாள், காரட், குடைமிளகாய் இவை மூன்றையும் நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாகவும், சன்னமாகவும் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயத்தாளையும் வதக்கிக் கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு பக்கமாக 10 நிமிடம் வைக்கவும்.
காய்கள் அரை வேக்காடாக வெந்திருக்க வேண்டும்.
அரிசியை நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதி எண்ணெயை வாணலியில் ஊற்றி அரிசியை அதில் விட்டு எல்லா அரிசியிலும் எண்ணெய் படும் படி புரட்டி விடவும்.
அரிசியை குக்கரில் உள்ள சட்டியில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து 8 நிமிடங்கள் வேக விடவும்.
பக்குவப்படுத்தப்பட்ட அரிசியுடன் வதக்கின காய்களையும் தக்காளி சாஸையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். சூடாக பரிமாறவும்.