ப்ரான் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சம்பா அரிசி - 2 கப்

இறால் - அரை கிலோ

தேங்காய் பால் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று

கீறிய பச்சை மிளகாய் - 3

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு

முந்திரி - 10

திராட்சை - ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

பட்டர் - 50 கிராம் + ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

------------------------------

தாளிக்க:

---------------------------

பட்டை - ஒரு துண்டு

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

செய்முறை:

இறாலை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஒரு தேக்கரண்டி பட்டரில் முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள பட்டரைப் போட்டு உருகியதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.

இறால் அரை பதமாக வதங்கியதும்

அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிடவும்.

அதனுடன் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

சாதம் வெந்து தண்ணீர் வற்றியதும் 10 நிமிடங்கள் தம்மில் வைத்து எடுத்து வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்.

குறிப்புகள்:

சிக்கன் அல்லது வெஜ் குருமாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.