ப்ரான் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
ப்ரான் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் - ஒன்று ( துருவிக் கொள்ளவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
குடைமிளகாய் - ஒன்று (சிறுத் துண்டுகளாக நறுக்கவும்)
சாதம் - தேவையான அளவு
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ப்ரானுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊற வைத்த ப்ரானை சேர்த்து வதக்கி வேக விட்டு எடுக்கவும்.
அதே வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டை வெந்ததும் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து அதிக தணலில் வைத்து கிளறவும்.
அதனுடன் மீதிமிருக்கும் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டை காய்கறி கலவையுடன் வதக்கி வைத்துள்ள ப்ரானை சேர்க்கவும்.
கடைசியாக சாதம், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.