பொடி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டைமிளகாய் - 10

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

மிளகு - 10

அரிசி - அரை கிலோ

கடுகு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் பட்டைமிளகாய் எட்டு, சிறிது பெருங்காயம் எடுத்து வறுத்துக் கொள்ளவும்.

பின் கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

எண்ணெய்யில் வறுத்த பொருட்களை சிறிது உப்பு சேர்த்து அம்மியில் பொடி செய்து கொள்ளவும்.

பின்பு வாணலியில் நான்கு கரண்டி எண்ணெய் விட்டு இரண்டு மிளகாய், கடுகு இரண்டையும் சேர்த்து தாளிக்கவும்.

சாதத்தை வடித்து அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின் சாதத்தில் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

கலந்தபின் தாளித்த பொருட்களை கொட்டி கிளறவும். பின் பொடியைத் தூவிக் கிளறவும்.

குறிப்புகள்: