பைனாப்பிள் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் - ஒன்று

அரிசி - 3 கப்

மஞ்சள் தூள் - சிறிது

பைனாப்பிள் எசன்ஸ் - 1/2 ஸ்பூன்

நெய் - 6 ஸ்பூன்

முந்திரி, திராட்சை - தேவையான அளவு

சீனி - 7 ஸ்பூன்

செய்முறை:

பைனாப்பிள் பழத்தை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து ஜூஸாக வடிகட்டி கொள்ளவும்.

அரிசியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

ஜூஸின் அளவோடு அரிசி வேக தேவையான அளவு நீர் சேர்த்து எசன்ஸ், மஞ்சள்தூள், வறுத்த அரிசி சேர்த்து குக்கரில் வெயிட் போடாமல் வேக வைக்கவும்.

அரிசி வெந்தவுடன் மீதமுள்ள நெய், சீனி, சேர்த்து வெயிட் போட்டு 5 நிமிடம் 2 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்பு திராட்சை, முந்திரிக் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான பைனாப்பிள் ரைஸ் ரெடி

குறிப்புகள்: