பேளா ஹூளி
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
பீன்ஸ்., காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை - 2 கப் (நறுக்கிய துண்டுகள்)
உரித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
நெய் - 1/8 கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
----------------------------------------------
வறுத்து அரைக்க:
------------------------------------------------
பெருங்காயம் - ஒரு சிறுத் துண்டு
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10 அல்லது 12
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கப்
-------------------------------
பொடிசெய்ய:
------------------------------------
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - சிறு துண்டு
கிராம்பு - 2
பட்டை - சிறுத் துண்டு
---------------------------
தாளிக்க:
----------------------------
கடுகு - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
அரிசியை தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைத்து குழைய வேக விடவும். துவரம் பருப்பையும் வேக விட்டுக் கொள்ளவும்.
காய்கறிகளை சிறு துண்டுகளாக்கி சிறிது உப்பும், மஞ்சள்பொடியும் சேர்த்து நசுங்கும் பதமாக வேக விட்டுக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களுடன் பாதியளவு தேங்காய்த் துருவலை 3 தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொடி செய்யக் கொடுத்துள்ள மசாலா சாமான்களை எண்ணெயில்லாமல் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை குக்கரில் போட்டு நன்கு கிளறவும். அதில் கரைத்த புளியை விட்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கொதித்து புளி வாசனை போனதும் வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து கெட்டியானதும்
வறுத்து அரைத்த பொடியை சேர்க்கவும்.
அதன் பிறகு வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். மேலே வறுத்த தேங்காய் மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். நெய்யை காய வைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
குறிப்புகள்:
பொரித்த அப்பளம், அவியல், உருளை ரோஸ்ட்டுடன் அருமையாக இருக்கும்.