பேபிகார்ன் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

பேபிகார்ன் - 5

வெங்காயம் - ஒன்று ( நீளமாக நறுக்கவும்)

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 4

பிரிஞ்சி இலை - ஒன்று

பட்டை - 2 சிறிய துண்டு

கிராம்பு - 2

தயிர் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெங்காயத்தாள் - சிறிதளவு

கேரட் துருவல் - சிறிதளவு

வறுத்த முந்திரி - சிறிதளவு

நெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பேபி கார்னை பாதி பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பை போடவும்.

பின் வெங்காயம், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.

அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் தயிரை போட்டு வதக்கவும்.

பின் பேபிகார்னையும், அரிசியையும் போட்டு சிறிது நேரம் வறுத்த பின் 1 1/2 கப் தண்ணீர் தேவையான உப்பு போட்டு கலந்து மூடிப்போட்டு ஒரு விசில் 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும் .

பின் கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், முந்திரி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: