பூண்டு சாதம் (3)
தேவையான பொருட்கள்:
உப்பு சேர்த்து சமைக்கப்பட்ட சாதம் - 2 அல்லது 3 கப்
உரித்த சிறிய பூண்டிதழ்கள் - ஒரு கை
சிறிய வெங்காயம் - 10
வற்றல் மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து ஒரு சிறிய வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் பருப்பு வகைகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொண்டு அதே எண்ணெயில் கடுகு, மஞ்சள் தூள், தவிர மற்ற சாமான்களை நன்கு வதக்கி எடுக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மறுபடியும் ஒரு வாணலியில் பாக்கியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகைப்போட்டுத் தாளிக்கவும்.
சாதம், அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் எடுக்கவும்.