பூண்டு சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பூண்டு - 20 பல் (பெரிய பல்லாக)

தேங்காய் பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

வெங்காயம் - 2

பொரித்த வெங்காயம் - தேவைப்பட்டால்

பச்சைமிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்

முழு மிளகு - 10

முந்திரி - 10 துண்டு

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

பட்டை - 1 துண்டு

நெய் - 2 ஸ்பூன்

எண்ணைய் - தேவைக்குத் தகுந்தாற்போல்

உப்பு - தேவைக்குத் தகுந்தாற்போல்

செய்முறை:

வாணலியில் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,முந்திரி,பச்சைமிளகாய் இட்டு முறிய விடவும்.

பின் நீளவாக்கில் வெட்டிய மிளகு,வெங்காயம் வதக்கவும். நன்கு வதங்கிய பின் பூடுகளை போடவும்.

பிறகு இஞ்சி,பூடு விழுது சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு அரிசியை கொட்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பறிமாறும் போது பொரித்த வெங்காயத்தை மேலே தூவி பறிமாறலாம்.

குறிப்புகள்:

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு. குழந்தை பிறந்த உடன் இந்த சாதம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

காரம் அதிகம் இல்லாத தாளிச்சா, வெங்காய ரெய்தா உடன் சேர்த்து பறிமாறலாம்.

அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவும் கூட.