பூண்டு சாதம் (1)
தேவையான பொருட்கள்:
பூண்டு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் - 3
தேங்காய் துருவல் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சாதம் - தேவைக்கேற்ப
எண்ணெய் (அ) நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
வரமிளகாய், தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, மூன்றில் ஒரு பங்கு பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம், மீதியுள்ள பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் (அ) நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து வதக்கவும்., பூண்டு, வெங்காயம் வெந்ததும் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்றாக வதக்கவும். கலவை உதிர்வாக வரும் போது சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
உருளை சிப்ஸ், சேனை சிப்ஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.