பூண்டு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

பூண்டு - 10 பற்கள் (பெரிய பல்லாக)

தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

நெய் - 2 தேக்கரண்டி

மிளகு -10

முந்திரி - 10

ஏலக்காய் - ஒன்று

கிராம்பு - 2

பட்டை - ஒரு துண்டு

பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி

கொத்தமல்லி மற்றும் புதினா - சிறிது

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, முந்திரி, பெருஞ்சீரகம், புதினா, பச்சை மிளகாய் போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அரிசியைச் சேர்த்து

உப்பு போட்டு வேகவிட்டு இறக்கவும்.

சுவையான பூண்டு சாதம் தயார். கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: