புழுங்கல் அரிசி கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நீராகாரம் - 3 டம்ளர்

புழுங்கல் அரிசி (ஐ.ஆர். ரகம்) - ஒரு டம்ளர்

உப்பு - சிறிது

மோர் - சிறிது

செய்முறை:

நல்ல புழுங்கல் அரிசியில் வடித்த சாதத்தைத் தண்ணீர் ஊற்றி

இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் அதிலுள்ள தண்ணீரை (நீராகாரம்) மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கஞ்சிக்கு ஐ.ஆர்.20 ரக புழுங்கல் அரிசி நன்றாக இருக்கும்.(பொன்னி அரிசி வேண்டாம்). குக்கரில் அரிசியைப் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வைத்திருந்து வெந்ததும் இறக்கி வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால்

சாதத்துடன் கஞ்சி சேர்ந்து கொழகொழப்பாக இருக்கும். அத்துடன் தயாராக வைத்திருக்கும் நீராகாரத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு கொதி வரவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்:

மழைக் காலங்களில் காலை வேளையில் சுடச்சுட பருக புழுங்கல் அரிசி கஞ்சி . மோர் கலந்து பொட்டுக்கடலைத் துவையல் அல்லது பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

கூழ்வடகம் மற்றும் வெங்காய வடகமும் இதற்கு நல்ல காம்பினேஷன்.