புளி சுண்டல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி (பழைய சாப்பாட்டு அரிசி) - 2 டம்ளர்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வரமிளகாய் - 10
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 50 மி.லி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
புளியுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி திக்கான புளிக்கரைசலாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பச்சரிசியைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
அதேப் போல் தனியா மற்றும் வெந்தயத்தையும் சிவக்க வறுத்து எடுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கிள்ளிய வரமிளகாய். பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் புளி கரைசலுடன் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி (ஒன்றுக்கு இரண்டரை என்ற அளவில்) மஞ்சள் தூள், உப்பு, பொடித்த தனியா, வெந்தயப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து வறுத்த அரிசி சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி கலவையில் உள்ள தண்ணீர் வற்றியதும் பாத்திரத்துடன் குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியதும் பாத்திரத்தை வெளியில் எடுத்து மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கிளறிவிடவும். பொடியாக நறுகிய வெங்காயம்
குறிப்புகள்:
மாம்பழம் சேர்த்து சாப்பிடலாம்.