புளி சாதம் (சாதம் மீந்துவிட்டால்)
தேவையான பொருட்கள்:
சாதம் - 3 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
செய்முறை:
நாம் எப்பொழுதும் சாதம் மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி விடுவோம். அதற்கு பதில் மீந்த சாதத்தில் புளி ஊற்ற போகிறோம்.
முதலில் புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மிகவும் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
பின் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மீதம் உள்ள சாதத்தில் சேர்த்து கிளறவும்.(தண்ணீர் அதிகம் இருக்க கூடாது.).
இதை அனைத்தும் முன் தினம் இரவே செய்து மறு நாள் காலையில் எழுந்து சாதத்தை தாளித்தால் மட்டும் போதும்.
மறுநாள் காலையில் :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து பின் புளி சாதம் கலவையை சேர்த்து கிளறவும்.
சுமார் 10 நிமிடம் புளி வாசம் போகும் வரை கிளறி சூடாக புளி சாதத்தை பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம் நிறைய மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடுவதை விட இப்படி புளி சாதம் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.