புளி சாதம் வேறு முறை
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
புளி - 1 1/2 எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்)
---------------------------
தாளிக்க:
-------------------------------
கடுகு, உளுந்து - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பச்சை மிளகாய் - 1 என்னம்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
நிலக்கடலை பருப்பு - 2 ஸ்பூன் (தோல் நீக்கியது)
----------------------------
பொடிக்க:
--------------------------------
கடுகு - 1 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
எள் - 1 1/2 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
வெந்தயம் -1 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
சிவப்பு மிளகாய் - 2 என்னம்
செய்முறை:
அரிசியை சாதமாக வடித்து ஆறவிடவும்.
பொடிக்க கொடுத்த வற்றை கொர கொரவென (தண்ணீர் இல்லாமல்) பொடிக்கவும்.
வாணலியில் 1/4 கப் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடலை பருப்பு, நிலக்கடலை பருப்பு தாளிக்கவும்.
பின் கரைத்த புளிதண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணைய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து எண்ணைய் மிதந்ததும் பொடித்த பொடியை போட்டு கலந்து கொதித்து எண்ணைய் மிதந்ததும் இறக்கி வைக்கவும்.
ஆறவைத்த சாதத்தில் கொதித்த கலவை சேர்த்து கிளறி சாப்பிடலாம்.