புளி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - ஒரு ஆளுக்கு தேவையான அளவு

கெட்டியான புளிக் கரைசல் - அரை கப்

உப்பு - ஒரு தேக்கரண்டி

------------------------------

பொடிக்க:

---------------------------------

சீரகம் - 2 தேக்கரண்டி

வறுத்த வெந்தயம் - அரை தேக்கரண்டி

--------------------------

தாளிக்க:

--------------------------

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வரமிளகாய் - 2

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 10 இலை

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

எண்ணெயை காயவைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து புளிக்கரைசலும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் தீயை அணைத்து விட்டு சாதம் சேர்த்து கிளறவும். வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து சாதத்தில் தூவவும்.

குறிப்புகள்:

தாளிப்பு முடிந்து வறுத்த பொடி சேர்த்த பின் அருமையாக சாதம் மணக்கும். தேவைக்கு பொடியை கூட்டி சேர்க்கலாம்.