புளியோதரை (புளி சாதம்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கிலோ

புளி - 50 கிராம்

வரமிளகாய் - 4

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

வேர்க்கடலை - 100 கிராம்

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 200 மில்லி

புளிக்காய்ச்சல் தயாரிக்க:

வரமிளகாய் - 10

மல்லி - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 50 கிராம்

பெருங்காயம் - நெல்லிக்காய் அளவு

வெந்தயம் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு 10 மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கி கொள்ள வேண்டும்.

சாதத்தை 10 கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.

கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை போட்டு, கிள்ளிய வரமிளகாய் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

ஒரு கொதி கொதித்தவுடன் தூளாக்கியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

சாதத்தை அகலமான பேஷனில் ஆறவிட்டு புளிக்காய்ச்சலை ஊற்றி கிளற வேண்டும். தேவையென்றால் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

குறிப்புகள்: