புளிசாதம் (வயதானவர்களுக்கு)
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்து ஆறவைக்கவும் அரிசி - ஒரு கப்
-----------------------------
வறுத்து திரிக்க:
---------------------------
காய்ந்த மிளகாய் - மூன்று
வெந்தயம் - கால் தேக்கரண்டி
----------------------------
தாளிக்க:
------------------------------
நல்லெண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்
கருப்பு கொண்டைகடலை - அரை கப் (ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்)
புளி - ஒரு எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - தேவையான அளவு
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், வெந்தயம் போட்டு கருக விடாமல் வறுத்து ஆறியதும் பொடி செய்யவும்.
தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து வேகவைத்த கொண்டைகடலையையும் சேர்த்து புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் எல்லா தூள் வகைகளையும் போட்டு தீயை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும். கொதித்து கொண்டிருக்கும் போது வறுத்த பொடியையும் போடவும்.
நல்ல கொதித்து தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே மிதந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை போட்டு கிளறவும்.
குறிப்புகள்:
கொண்டைகடலையை வேக வைத்து போட்டால் சத்தும் கூட நன்கு கடித்தும் சாப்பிடலாம். புளிசாதம் ஒரு வித்தியாசமாகவும் இருக்கும்.