புளிசாதம்
தேவையான பொருட்கள்:
------------------------------------------
முதல் நாள் இரவு:
------------------------------------------
மீந்த சாதம் - 2 கப்
புளிக்கரைசல் - 1/2 கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
------------------------------
மறுநாள் காலை:
-------------------------
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
வர மிளகாய்/பச்சை மிளகாய் - 3
எண்ணெய், கடுகு, கறிவேப்பில்லை - தாளிக்க
செய்முறை:
முதல் நாள் இரவு : சாதத்தை தனித்தனியாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பின் இத்துடன் மஞ்சள் பொடி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
பின் இதனை சாதத்துடன் நன்றாக கலந்து மூடி வைத்து விடவும்.
------------------------------------
மறுநாள் காலை:
----------------------------------
பூண்டை உரித்து தட்டிக் கொள்ளவும், மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்
வாணலியை அடுப்பில் காய வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய், பின் பூண்டு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போடவும். வெங்காயமும், பூண்டும் சற்று வதங்கியவுடன் முன்பே புளியுடன் கலந்து வைத்த சாதத்தை கொட்டி நன்றாக கிளறவும். பின் உப்பு சரிபார்த்து இறக்கவும்.
குறிப்புகள்:
கத்திரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட சுவையோ சுவை.
பின் குறிப்பு: முதல் நால் இரவு சாதத்தை புளிக்கரைசலுடன் கலந்து வைப்பதனால் விரைவில் கெட்டுப்போகாது. எனவே மறுநாள் தேவைப்படும் போதும் எடுத்து தாளித்துக் கொள்ளலாம்.