புரோசன் பீஸ் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

புரோசன் பீஸ்(பட்டாணி) - கால் கப்

மிளகு - ஐந்து

சீரகம் - கால் தேக்கரண்டி

கேரட் - ஒரு தேக்கரண்டி (பொடியாக அரிந்தது)

எண்ணெய் + பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி

உப்பு - அரை தேக்க‌ர‌ண்டி (அ) தேவைக்கு

செய்முறை:

அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் + பட்டரை ஊற்றி மிளகு, சீரகம், கேரட், பீஸ் போட்டு லேசாக வதக்கவும்.

த‌ண்ணீர் ஒன்றுக்கு ஒன்றரை க‌ப் வீத‌ம் ஊற்றி ஊறிய‌ அரிசி சேர்த்து உப்பு போட்டு கொதிக்க‌ விட‌வும்.

பாதி கொதித்து வ‌ரும் போது குக்க‌ரை மூடி வெயிட் போட்டு இர‌ண்டு விசில் விட்டு மூன்றாவ‌து விசிலில் அடுப்பை அணைக்க‌வும்.

குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் லேசாக‌ பிர‌ட்டி விட்டு வேறு ஒரு ப‌வுளில் சாதத்தை மாற்ற‌வும்.

சுவையான‌ ஈசி புரோசன் பீஸ் ரைஸ் ரெடி கொத்தம‌ல்லி துவைய‌லுட‌ன் சாப்பிட‌வும்.

குறிப்புகள்:

குக்க‌ரில் செய்வ‌தால் ஈசியாக‌ சீக்கிர‌ம் த‌யாரித்து விட‌லாம்.

இதை டூர் செல்லும் போதும் நொடியில் செய்து கொத்தம‌ல்லி துவைய‌லுட‌ன் கொண்டு செல்ல‌லாம்.

குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ள்ளிக்கும் கொடுத்து அனுப்ப‌லாம்.