புதினா ரைஸ் (2)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - ஒரு டம்ளர்
புதினா - ஒரு கட்டு
பச்சைமிளகாய் - 4
தக்காளி - ஒன்று
ஏலக்காய் - 2
பட்டை - ஒரு சிறுத்துண்டு
கிராம்பு - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
மஞ்சள்பொடி - சிறிது
நெய் + எண்ணெய் - 50 மி.கி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புதினா
பச்சைமிளகாய்
தக்காளி
ஏலக்காய்
பட்டை
கிராம்பு
சோம்பு எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து வடிக்கவும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம்
அரிசியை சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் ( 1:2 1/2 பங்கு )தண்ணீர்
உப்பு
மஞ்சள் பொடி சேர்க்கவும். அரிசி வெந்து தண்ணீர் வற்றியதும் குக்கரில் வைத்து 2 விசில் வைக்கவும். பிரஷர் அடங்கியதும் அரிசி உடையாதவாறு கிளறி விடவும்.
புதினா ரைஸ் தயார். ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும். தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலும் சேர்க்கலாம். சுவை அதிகமாக இருக்கும்.