புதினா ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 3

கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி

எலுமிச்சை - அரை மூடி

முந்திரி - 5

---------------------------------

அரைக்க:

------------------------------

தக்காளி - ஒன்று

புதினா - ஒரு கட்டு

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 10 பல் (சிறிய பல்)

முந்திரி - 5

பட்டை - சிறு துண்டு

சோம்பு - ஒரு தேக்கரண்டி

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினாவை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியைக் களைந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி

எலுமிச்சை சாறு பிழிந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் வதக்கவும்.

பின்பு அரைத்த விழுது, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு விசில் முழுதாக விட்டு 2 ஆவது விசில் வரும் முன் அடுப்பை நிறுத்தி விடவும். ஒரு டர்க்கி டவலை நீரில் நனைத்து குக்கரை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

ஆனியன் ரைத்தா அல்லது வெஜ் குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.