புதினா ரைஸ்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
பீன்ஸ் - 4
காரட் - ஒன்று
காலிஃப்ளவர் - கால் பகுதி
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 3
புதினா - 10 கொத்து
கொத்தமல்லித் தழை - 5 கொத்து
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 10 பல்
எண்ணெய் - கால் கப் + 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பீன்ஸ்
கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அரிசியைக் களைந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் கொத்தமல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், பூண்டு போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து பிழிந்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து மற்றொரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், காரட், காலிஃப்ளவர் ஆகியவற்றைப் போட்டு மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் கலவையை ஊற்றி கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அதனுடன் தேங்காய் பால்
உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறிவிடவும்.
குக்கரை மூடி வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு குக்கரை திறந்து (விரும்பினால்) முந்திரியை வறுத்து சேர்க்கவும்.
குறிப்புகள்:
இதை தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.