புதினா புலாவ் 2010
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1
புதினா - 2 கட்டு
வெங்காயம் - 2 (நடுத்தர அளவில்)
தக்காளி - 1 (நடுத்தர அளவு)
பச்சை மிளகாய் - 2
உரித்த பச்சை பட்டாணி - 1 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
தனியா பவுடர் - 1 மேசைக்கரண்டி
கசகசா - 1 மேசைக்கரண்டி
அஜினாமோட்டோ - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
அன்னாசிப்பூ - 1
பட்டை - 1 சுருள்
பட்டை - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 2
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து அலசி வைக்கவும். வெங்காயம்
தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாய் அல்லது வாணலியை சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு
கசகசா
சுருள்பட்டை போட்டு நன்கு பொரிய விடவும்
பின்பு மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியவுடன் புதினாவையும் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.
பின்பு அதே நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியவுடன் எடுத்து ஆற விடவும். ஒரு மிக்ஸியில் வதக்கிய எல்லாவற்றையும் போட்டு அதனுடன் தனியா தூள்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்.
ஒரு கோப்பை அரிசிக்கு இரண்டு கோப்பை பால் வரும்படி பால் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான உப்பு
கரம் மசாலா தூள் சேர்த்து தனியாக வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும்
அவை சூடானதும் அதில் அன்னாசிப்பூ
பட்டை
அஜினாமோட்டோ
முந்திரி
பிரிஞ்சி இலை சேர்த்து வாசனை வரும் வரை பொரிய விடவும்.
பிறகு அதில் அரிசியை களைந்து போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு மசாலா கலந்த பாலை ஊற்றி கிளறி விடவும்.
அரிசி கலவையில் பசசை பட்டாணியை சேர்த்து லேசாக கிளறி மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து புதினா
கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறவும்.