புதினா புலாவ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - 2 கட்டு (பெரியது)

கொத்துமல்லி இலை - 1 கட்டு

பட்டை,கிராம்பு - 2 அல்லது 4

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

மிளக்காய் தூள் - 1 தே.க

பாசுமதி அரிசி - 1 கப்

செய்முறை:

புதினா.கொத்துமல்லியை சுத்தம் செய்து,ஆய்ந்து,மிக்சியில் விழுதாக அரைக்கவும்

தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோல் உரித்து விழுதாக அரைக்கவும்

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்

வாணலியில் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு போட்டு வதக்கவும்,பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதக்கியதும்,பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது சேற்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு அரைத்த புதின,கொத்துமல்லி விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வத்தக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பாசுமதி அரிசி சேர்க்கவும்.

சிறிது பிரட்டி விட்டு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும்

குறிப்புகள்: