புதினா புலாவ் (1)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 200 கிராம்
--------------------------------------
வறுத்து பொடிக்க
------------------------------------
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
-------------------------------------------------
வதக்கி அரைக்க
---------------------------------------------------
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
--------------------------------------
தாளிக்க
-----------------------------------------
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
செய்முறை:
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து, அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
குறிப்புகள்:
எதுவும் இல்லாமல் அப்படியே பிடிச்சி சாப்பிடலாம்.இதில் தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்