புதினா புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கட்டு

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 7 பல்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

மிளகு - ஒரு தேக்கரண்டி

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 3

பச்சை பட்டாணி - ஒரு கப்

பச்சைமிளகாய் - 6

மஞ்சள்தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

பாஸ்மதி அரிசி - 4 கப்

-----------------

தாளிக்க :

-------------------

நெய் - தேவைக்கு

பட்டை - 3

கிராம்பு - 3

பிரிஞ்சி இலை - ஒன்று

செய்முறை:

புதினா, மிளகு, பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு சேர்த்து அரைக்கவும்.,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

குக்கரில் நெய் ஊற்றி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் பட்டாணி அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரிசியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

பின் ஒரு பங்கு அரிசிக்கு 1 3/4 வீதம் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதித்ததும் வெயிட் போட்டு 8 நிமிடம் வைத்து இறக்கவும். (கொதிக்கும் போது சுவை பார்த்து காரம் தேவையென்றால் மிளகாய் தூள் சேர்க்கலாம்)

குறிப்புகள்:

ஆனியன் ரைத்தா, உருளை குருமா பொருத்தமாக இருக்கும்.

இதே முறையில் மல்லித்தழையிலும் செய்யலாம்