புதினா புலாவு
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கப்
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
முந்திரி - 10
நெய் + எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
---------------------------
தாளிக்க:
------------------------
பட்டை - சிறிது
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
செய்முறை:
அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
புதினாவை பொடியாக நறுக்கவும். 10 புதினா இலையை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள் வாட்டில் வெட்டவும்.
பாத்திரத்தில் நெய் + எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் முந்திரி போட்டு சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
லேசாக வதக்கியம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போக வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய புதினா சேர்த்து வதக்கி தயிர் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
2 1/2 கப் நீர் விட்டு கொதித்ததும் அரிசி சேர்த்து கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி முழுவதும் வெந்ததும் மேலே எடுத்து வைத்த கொத்தமல்லி இலை சேர்த்து எடுக்கவும்.
குறிப்புகள்:
இன்னுமே புதினா வாசம் விரும்பினால் புதினாவை முதலில் சேர்க்காமல் முதலில் அரிசியை செர்த்துவிட்டு பின் நறுக்கிய புதினா சேர்க்கலாம்.