புதினா சாதம் (3)
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புதினா இலை - இரண்டு கப் (பொடியாக நறுக்கியது)
பாசுமதி அரிசி - இரண்டு கப்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - ஐந்து பல்
பச்சை மிளகாய் - நான்கு
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும். புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றாக மைப்போல அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மூன்று கப் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் கொதித்தவுடன் அரிசியில் இருந்த தண்ணீரை வடிகட்டிவிட்டு, அரிசியை போடவும்.
நன்றாக கிளறி விட்டு, பின் மூடி போட்டு, சிம்மில் இருபது நிமிடம் வைத்து வேக விடவும்.