புதினா சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா இலை - இரண்டு கப் (பொடியாக நறுக்கியது)

பாசுமதி அரிசி - இரண்டு கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - நான்கு

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - இரண்டு

பிரியாணி இலை - ஒன்று

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

உப்பு - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரிந்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கி விட்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் தக்காளி, புதினா இலையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

பின்னர் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு கிளறி விட்டு, பின் மூடிபோட்டு சிம்மில் வேக விடவும். அரிசி வேகும் வரை அவ்வப்போது கிளறி விடவும்.

குறிப்புகள்: