புதினா சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னி அரிசி - 1/4 கிலோ

புதினா இலை - 1 கட்டு

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி

ஏலம், பட்டை, கிராம்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் ப்ரஷர் பேனை வைத்து, அதில் சிறிதளவு நெய்யை ஊற்றவும்.

நெய் காய்ந்தவுடன் அதில் ஏலம், பட்டை, கிராம்பு அனைத்தையும் போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுதையும் போட்டு நன்கு வதக்கவும்.

பச்சை வாசனை போன பிறகு கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, உப்பையும் போட்டு பேனை மூடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து 2 விசிலில் இறக்கவும்.

குறிப்புகள்:

சிறிய வெங்காயம் 5, தக்காளி 1 இவற்றையும் அரைத்துப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.