புதினா சாதம்
0
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் (நெய்யில் வதக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்)
புதினா - 3/4 கட்டு (ஆய்ந்து கழுவி வைக்கவும்)
தேங்காய் - 1 பத்தை
பச்சை மிளகாய் - 3 என்னம் (காரத்திற்கு ஏற்ப)
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 4 என்னம்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
வாணலியில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.
பின் சீரகம்,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
புதினா,தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்.
பின் தாளித்த கலவையில் அரைத்தவைகளை கொட்டி ஒரு வதக்கு வதக்கி அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கலக்கி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.