புதினா கேஷ்யூ புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கட்டு

இஞ்சி - ஒரு விரல் நீள துண்டு

பூண்டு - 10 பல்

ஏலக்காய் - 2

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

பச்சை மிளகாய் - 4

பச்சரிசி - ஒரு டம்ளர் (பாசுமதி (அ) பிரியாணி அரிசி)

தேங்காய்ப் பால் - 2 1/4 டம்ளர்

முந்திரி - 50 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தக்காளி - ஒன்று (சிறியது)

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

புதினா, தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி அரைத்த இஞ்சி, பூண்டு மசாலா விழுதினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் வடிகட்டி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் அரைத்த புதினா விழுது முந்திரியைச் சேர்த்துத் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும். (புதினா விழுது முந்திரியை வறுக்க வேண்டாம்). பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். தேங்காய் பால் வற்றியதும் குக்கருக்கு மாற்றி 2 விசில் வைத்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் புலாவை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

குறிப்புகள்:

வெள்ளரி ரெய்தாவுடன் பரிமாறவும்.