பீஸ் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் -1 கப்

தோலோடு பச்சை பட்டாணி - 250கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

---------------------------

வறுத்து பொடிக்க:

--------------------------

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

கடலைபருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

சிவப்புமிளகாய் - 1

எண்ணை- வதக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

உதிரியாக வடித்த ஒரு கப் சாதத்தை ஆறவிடவும்.

முதலில் பச்சைபட்டாணியை உரித்தெடுக்கவும்.

பச்சை பட்டாணி தோலில் இரு நுனியிலும் வெட்டி விட்டு விளிம்பில் உள்ள நார்பகுதியை எடுத்து விட்டு வெண்மையான உள்தோல் இருந்தால் அதையும் நீக்கிவிட்டு வெளித்தோலை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுக்கவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பட்டாணி மற்றும் நறுக்கிய பட்டாணிதோலை நீர் தெளித்து மைக்ரோவேவ் மீடியமில் 5 நிமிடங்கள் வைக்கவும்.

வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும்.

முதலில் வேர்க்கடலையை தனியாக போட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து எடுக்கவும்.

மீதமுள்ள உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய் மூன்றையும் ஒன்றாக போட்டு கரகரப்பாக பொடிக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்

வதங்கியதும் மைக்ரோவேவில் வேகவைத்த பட்டாணி கலவையை போட்டு மிதமான தீயில் நீர் வற்றும்வரை வதக்கவும்

வதங்கியதும் அதில் வடித்த சாதம் கொட்டி கிளறி அடுப்பை அணைக்கவும்.

பின் வறுத்து பொடித்தவற்றை சாதத்துடன் போட்டு கிளறவும்

குறிப்புகள்:

பிஞ்சு பட்டாணியா இருந்தா உள்தோல் இருக்காது ..ஓரம் ,நுனி எடுத்துட்டு அப்படியே நறுக்கலாம்.வெண்மையான உள்தோல் இருந்தால் மட்டும் எடுக்கணும்.

பொதுவா நிறைய சத்துள்ள இந்த தோலை நாம தூக்கி போடுவதற்கு பதில் இதுபோல் செய்தால் சத்தோடு சுவையும் அருமையா இருக்கும்.

இதில் விரும்பினால் தக்காளியை தவிர்த்து விட்டு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் சேர்க்கலாம்.

குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்,ஆபீஸுக்கு லஞ்ச்பாக்ஸ் எடுத்து போக எளிதானது