பீட்ரூட் புலாவ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - ஒன்று (சிறிதாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - அரை கப்
பாசுமதி அரிசி - ஒரு கப்
கொத்தமல்லி - கால் கப்
புதினா - கால் கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
சாம்பார் பொடி (கொத்தமல்லி + மிளகாய்) - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய் - சிறு துண்டு
செய்முறை:
அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கொத்தமல்லி புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம்
தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியாக பாதி அளவு நறுக்கிய புதினா கொத்தமல்லியை சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
வதக்கியவை ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை
லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து மீதமிள்ள கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுது மற்றும் தூள் வகைகளை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
அதன் பின்னர் நறுக்கிய பீட்ரூட் வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து பிரட்டி 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் அரிசியை சேர்த்து மீண்டும் கொதி வந்ததும் குக்கரை மூடி சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஆறியதும் திறந்து பக்குவமாக கிளறி விடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்.