பீட்ரூட் பாலக் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - ஒன்று
பாலக் - 2 கைப்பிடி
அரிசி - ஒரு ஆழாக்கு/டம்ளர்
துவரம் பருப்பு - கால் டம்ளர்
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, சீரகம், சிறிது பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை:
பீட்ரூட்டை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, நறுக்கி கொள்ளவும், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும் பருப்பை களைந்து வைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்., இதனுடன் பாலக் கீரையை சேர்த்து கிளறவும்.
இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
பின்னர் இதனை மூடி 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
குறிப்புகள்:
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் பாலக் ரைஸ் தயார்.