பீட்ரூட் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
பீட்ரூட் - ஒன்று (சிறியது)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கறுவா - சிறுதுண்டு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 உப்பு
கறிவேப்பிலை, முந்திரி, பிளம்ஸ் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், கறுவா, ஏலக்காய், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பின்பு சீரகம்
நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்தாக சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டை நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும் போது உப்பை அளவாக சேர்க்கவும்.
பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதே அதில் சிறிது சிறிதாக சாதத்தை சேர்க்கவும். சாதம் முழுவதும் சிவப்பு நிறமாகும் வரை நன்கு பிரட்டிவிடவும்.
டேஸ்டி கலர்புல் பீட்ரூட் சாதம் ரெடி. நெய்யில் பொரித்த முந்திரி, பிளம்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.