பீட்ரூட் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 3 மேசைக்கரண்டி

பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி

பூண்டு - ஒரு பல்

பீட்ரூட் - ஒன்று (சிறியது)

கேரட் - கால் பகுதி

செய்முறை:

அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி வைக்கவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு

ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடியிட்டு 3 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து நன்கு மசித்துவிடவும்.

குறிப்புகள்:

குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் சாதம் தயார். விரும்பினால் நெய் சேர்த்து ஊட்டலாம்.