பிஸ் ப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி சாதம் - 2 கப்

முள் இல்லாத மீன் - கால் கிலோ

மிளகாய் தூள் - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்

பூடு - 5 (தட்டியது)

வினிகர் - அரை ஸ்பூன்

கார்ன்ப்ளார் - 1 ஸ்பூன்

முட்டை கோஸ் - 1/2 கப்

கேரட் - 1 கப்

பீன்ஸ் - 4

பச்சை பட்டாணி - 4 ஸ்பூன் அரைப்பதமாக வேக வைத்தது)

பச்சை குடைமிளகாய் - 1 கப்

ஒயிட் பெப்பர் - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

முட்டை - 2

வெங்காயம் - 2

இஞ்சி,பூடு விழுது - 2 ஸ்பூன்

அஜினோமோட்டோ - விரும்பினால் சிறிதளவு

உப்பு - தேவைக்குத் தகுந்தபடி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

மீனை துண்டுகளாக்கி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, வினிகர்,பூடு, கார்ன் ப்ளார் தேவைபட்டால் கலர் பொடி சேர்த்து ஊறவிடவும்.

பின் எண்ணெயில் தனிதனியாக பொரித்து எடுக்கவும்

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அஜினோமோடோ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் வெங்காயம்,முட்டை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் இஞ்சி,பூடு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

அதில் காய்கறிகள் அனைத்தையும் கொட்டி உப்பும்,ஒயிட் பெப்பரும் சேர்த்து கிளறி வதக்கவும்.

காய்கறிகள் பாதி வெந்ததும் சாதத்தை கொட்டி காய்கறிக்கலவை நன்குபடும்படி கிளறவும்.

பொரித்த மீன் துண்டுகளுடன் சேர்த்து ஒரு முறை கிளறி பின் இறக்கவும்.

குறிப்புகள்:

முட்டையை தனியாக வேறுபாத்திரத்தில் பொரித்தும் மீனோடு கடைசியில் சேர்க்கலாம்